மாதம் தோறும் பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்துவருவது மிகச் சிறந்த பலன்களை தரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிகளுக்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு.
பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரவல்லது.
எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம். அதன்படி,
சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.
வைகாசி பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்.
ஆனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஆடி பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்.
ஆவணி பௌர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.
புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்.
ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் பிணிகள் நீங்கும்.
கார்த்திகை பௌர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்.
மார்கழி பௌர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தை பௌர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.
மாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்.
பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும் .