வடமாகாண விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யவுள்ள நிலையில், அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட் இறக்குமதி செய்துள்ளது.
இலங்கை அரசாங்கமும், விவசாய அமைச்சும் வேண்டுமேன்றே இவ்வாறு பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட்டை இறக்குமதி செய்துள்ளது.
இது எமது நாட்டு விவசாயிகளின் வருமானத்தை இழக்கச் செய்யும் செயற்பாடாகும்.
நாட்டில் விவசாய அறுவடைகள் செய்யப்படும் தருணங்களில் பொதுவாக இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
எனினும் இம்முறை இதற்கு எதிர்மறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீட்ரூட் இறக்குமதியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.