உக்ரைனில் உள்ள கனேடிய மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அவசர அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டுள்ளதால், உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா எச்சந்தர்ப்பத்திலும் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை நடத்தலாம் எனவும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் எனில் ரஷ்யா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்காவும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், உக்ரைன் மீதான தாக்குதல் திட்டம் எதுவும் இல்லை எனவும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது 100,000 படைகளை குவித்துள்ளதுடன், உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகின்றது.
இதனிடையே, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, உக்ரைன் பிரதமரை சந்திக்கும் பொருட்டும் கனடாவின் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் உக்ரைன் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.