கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 37 இலட்சம் பெறுமதியான 852 கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக தமிழக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சென்னையில் இன்று கொழும்பில் இருந்து வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கடத்தல் குறித்து விளக்கம் அளித்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர், கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37.88 லட்சம் என்றும், கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.