இலங்கையில் ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சில ஹோட்டல்களில் ஒரு இரவுக்கான அறைக் கட்டணம் 50,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நாட்டிற்கு 46,942 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், தினமும் கிட்டத்தட்ட 3,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதற்காக 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.