தற்போது, கோவிட் அறிகுறிகள் இல்லாதாவர்களுக்கே கொரோனா பரிசோதனையில் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனாலும், ஒருவருக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் காட்ட சில முக்கிய அறிகுறிகள் இருக்கத்தான் செய்கின்றன.
Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸைப் பொருத்தவரை, குறிப்பாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் அவ்வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலையில், அவர்களுக்கு வெறும் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் மட்டுமே காணப்படும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நீங்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உடைய உங்கள் உறவினர் ஒருவரை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீங்கள் உங்களுக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஆக, என்னென்ன அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கலாம்.