இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மதகல் பகுதியை சேர்ந்த மாதகல் மதன் என்ற புனை பெயருடைய 44 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகபர் வேதாரணியம் – செம்போடை பகுதியில் நேற்றுமுன்தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புதுறையன் கண்காணிப்பு மற்றும் தேடுதலில் இருந்த நிலையில் சந்தேக நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளா 2021 அக்டோர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சாகடத்திய விவகாரத்தில் இவர் தமிழகத்தில் தேட்பட்டுவந்த நிலையில், தமிழக பொலிஸாருக்கு போக்குகாட்டி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கைதானார்.
அதேசயம் சந்தேகநபர், 2012ம் ஆண்டு தமிழகத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகி சுமார் ஒன்றரை வருடங்களாக சிறைத்தண்டணை அனுபவித்த பின்னர் 2013ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானவர் என கூறப்படுகிறது.
மீண்டும் விமானம் மூலம் நாடு திரும்பிய குறித்த நபர் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோதும், மீளவும் கடத்தலில் ஈடுபடுகின்றார் என்ற கோணத்தில் பாதுகாப்பு பிரிவினி் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த குறித்த நபர் 2021 அக்டோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்த முயற்சித்ததாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர் தமிழகத்தில் பிறிதொரு இடத்தில் கஞ்சா பெற்றுகடல்மார்க்கமாக வேதாரண்யம் பகுதிக்கு வந்த இலங்கை கடத்தல் குழுவின் படகிலிருந்து அவர் இறங்கியதுடன், 3 மூடை கஞ்சாவையும் இறக்கியதுடன், மிகுதி கஞ்சாவுடன் சென்ற ராஜன் என்ற மயிலிட்டியை சேர்ந்த நபரும், சாகுல் என்ற மட்டக்களப்பை சேர்ந்த நபரும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதன் கொண்டு சென்றதாக கூறப்பட்ட கஞ்சா புஸ்பவனம் பகுதியில் கைப்பற்றப்பட்டபோது அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம் – செம்போடை கிராமத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.