நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகை. அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி என சில்க் ஸ்மிதா எல்லா விஷயத்திலும் பட்டய கிளப்பி இருப்பார்.
சினிமா காலத்தில் உச்சத்தில் இருந்த நேரத்தில் நடிகை சில்க் ஸ்மிதா திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது இறப்பிற்கான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரிய வருகின்றன. பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிய நடிகர் மன்சூர் அலிகானை தான் சில்க் ஸ்மிதாவிற்கு மிகவும் பிடிக்குமாம்.
நடிகராவதற்கு முன்பு குரூப் டான்சராக இருந்த போது தான் மன்சூர் அலிகான் மற்றும் சில்க் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா, மன்சூர் அலிகானிற்கு தான் பயன்படுத்திய விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறாராம்.
இவர்கள் இருவருக்கும் இப்படியொரு நட்பு இருந்தது யாருக்குமே அவ்வளவாக தெரியாது என்கின்றனர்.




















