கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல் ஒன்றின் கோபுரத்திற்குள் பெண் மயில் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனை மீட்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக அதனை மீட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் மயில் அங்கு எப்படி வந்த மாட்டிக்கொண்டது என்பது எவருக்கும் தெரியவில்லை. ஒரு வாரம் இந்த பறவை சுமார் 100 அடி உயரமான கோபுரத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
மேல் மாகாண வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், விமானப்படையினர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு, கொழும்பு தீயணைப்பு படையினர் இணைந்து பெண் மயிலை மீட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேல் மாகாண வனஜீவராசிகள் அலுவலகத்தின் விலங்கியல் மருத்துவர் துல்மினி தியகொட,
“ பறவையின் செயற்பாடுகள் அது ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகின்றன. இதனை நாங்கள் எமது விலங்கியல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உள்ளோம். அங்கு கொண்டு பரிசோதனை நடத்தி சிகிச்சையளிக்கும் தேவை இருந்தால் அதனை செய்வோம். அதன் பின்னர் அதனை விடுவித்து விடுவோம்” எனக் கூறியுள்ளார்.