நாட்டில் இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இயற்கை காடுகளில் இறப்பர் பயிர்ச்செய்கையையும் சேர்க்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா செலவில் 500 ஹெக்டேயர் பரப்பளவில் இந்த வருடம் இறப்பர் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.




















