யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் நடராசா பரமேஸ்வரி (68) என்ற பெண்ணே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த பெண் தனித்து வாழ்ந்து வந்த நிலையில், நள்ளிரவுகளிலும் அவர் வீதிகளில் நடமாடுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரிந்த நிலையில் குறித்த யயோதிப மாது சடலமாக காணப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது


















