எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையில் அடிதடி சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.
ஊருபொக்க நகரத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்டிருந்தார்.
பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அரசாங்கத்திற்கு எதிராக கண்டன ஊர்வலம் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது மாத்தறை வீதியில் ஊருபொக்க பாடசாலை நோக்கி இந்த போராட்ட ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களால் அடிதடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் அவ்விடத்திற்கு வருகைத்தந்து மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவர்களில் இருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பதிவு செய்த ஊடகவியலாளர்களின் கமராக்களும் பொலிஸாரினால் பறிக்கப்பட்டுள்ளன.