2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி யுவராஜ் சிங் திருமணம் செய்துகொண்டார்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது:-
கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த குழந்தையை வரவேற்கும் அதேவேளையில் எங்கள் தனியுரிமையையும் மதிக்க விரும்புகிறோம்.