திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கு முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கோவிட் குழு தீர்மானித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.