தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற நேரங்களில் நாம் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். நாம் முடிந்தளவு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமக்கு முடியுமானால் நாம் வாகனங்களில் செல்லும் பயணங்களை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடியும்.
ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைகள் சைக்கிளில் பாடசாலை செல்கின்றனர். சிலர் வேலைக்கு சைக்கிளில் செல்கின்றார்கள் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.