டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டொலர் நெருக்கடியானது கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களை விடுவிப்பதில் நீண்டகால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பல்களில் ஆபத்தான சரக்குகளும் உள்ளதாக, இறக்குமதியாளர்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பெயிண்ட் தயாரிப்புக்கான பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த எட்டு வாரங்களாக துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் மிகவும் எரியக்கூடியவை மற்றும் தீவிர வெப்ப நிலையில் நீண்ட மணிநேரம் வைத்திருக்கக்கூடாது. “இந்த பொருட்கள் 24-48 மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும், ஆனால் அவை கிட்டத்தட்ட எட்டு வாரங்களாக துறைமுகத்தில் சிக்கியுள்ளன.
இலங்கையில் அமெரிக்க டொலருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் அமெரிக்க டொலரை பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு மத்திய வங்கி கடுமையான வரம்புகளை விதித்துள்ளது. மேலும் துறைமுகத்தில் உள்ள சில பொருட்களை அகற்ற நீண்ட கால தாமதம் ஆவதால் இதற்கு தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக மற்றொரு விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியானது தமது வர்த்தகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கைக்கான ஏற்றுமதியாளர்களின் நம்பிக்கையையும் குலைப்பதாக விநியோகிஸ்தர்கள்.
டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் பல சரக்குகள் தேங்கிக் கிடப்பதாக அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்துள்ளார்.