ஜேர்மனியின் தென்மேற்கில் உள்ள ஹைடெல்பெர்க்( Heidelberg)பல்கலைக்கழக விரிவுரை மண்டபத்திற்குள் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர்.
சம்பவத்தின் பின்னர், துப்பாக்கித்தாரியும் தமது தாமே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
கொலையாளி 18வயதான மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் துப்பாக்கிதாரிக்கு மதம் அல்லது அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தெரியவந்துள்ளதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹைடெல்பெர்க் சுமார் 160,000 மக்களைக் கொண்ட ஒரு பல்கலைக்கழக நகரமாகும்.
நாட்டில் ஐரோப்பாவில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் உள்ளன.
அத்துடன் 25 வயதிற்குட்பட்ட எவரும் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு முன் உளவியல் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாடும் உள்ளது.
இதேவேளை துப்பாக்கிதாரி, ஒஸ்ரியாவில் மூன்று துப்பாக்கிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதில் இரண்டை தாக்குதலின்போது எடுத்து வந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.