13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தினை பெற்றுக்கொடுத்து சில பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, இந்திய மீனவர்களின் மோதல் தீவிரமடைந்துள்ளது.மக்கள் ஆத்திரமடைந்து சட்டத்தினை கையிலெடுத்து இந்திய மீனவர்களை பிடிக்க சென்றுள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலில் கொலையும் இடம்பெற்றுள்ளது.சடலங்கள் இன்றைய தினம் கரையினை வந்தடையவுள்ளது.