இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார்.
டொலர் இல்லாமையினால் டொலர் பற்றாக்குறை ஏற்படவில்லை். டொலருக்கான கோரிக்கை அதிகரித்துள்ளமையே அதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் டொலரை பெற்றுக் கொள்வதற்காக மாற்று வழி மற்றும் முறை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
டொலருக்கான தேவை ஏற்பட்டுள்ளதென்பது ஒரு மோசமான விஷயம் அல்ல. டொலர் நுகர்வைக் குறைப்பது குறித்து சிந்திக்காமல் டொலரை சம்பாதிப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கும் நடவடிக்கைளை மேற்கொள்வதே தற்போதைய அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.