கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருச்து 4 தங்க சங்கிலிகள் மற்றும் தங்க பென்டன்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் 29 மற்றும் 28 வயதுடைய கோனபல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகுதம். அவர்கள் இருவரும் கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.