கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆனது மக்களை ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் வேலையில், இதுவரை 57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்டா, ஓமைக்ரான் என கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
ஆனால், தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதன்படி பைஸ் நகரில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இருந்தாலும், கொரோனாவே பரவக்கூடாது என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பைஸ் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பைஸ் நகரின் நகர்ப்புற பகுதிகளில் 14 லட்சம் மக்களும் கிராமப்புற பகுதிகளில் 30 லட்சம் மக்களும் வசிக்கின்றனர்.