வவுனியா நகர சதொச கிளையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் பெண் முக கவசமின்றி கடமையில் ஈடுபட்டுள்ளதால், பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று (10) காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் முக கவசத்தினை தனது உடையில் வைத்துள்ள நிலையில் பொலிஸாருக்கு முன்பாகவும் முக கவசமின்றியே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள், குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முக கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விடயம் தொடர்பில் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.