உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் முதன்முதலில் தனது மகன் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஜேம்ஸ் ரிலே என்பவரது மகன் பாரெட், மே 8, 2018 அன்று டெஸ்லா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,ஜேம்ஸ் ரிலேவுக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலில் எலான் மாஸ்க் முதன்முதலில் தனது மகன் குறித்து தெரிவித்துள்ளார்.
அந்த உரையாடலில் “என் முதல் மகன் என் கைகளிலேயே இறந்தான். அவனுடைய கடைசி இதயத் துடிப்பை உணர்ந்தேன்” எனவும்,எலான் மஸ்க்கின் மகன் நெவாடா அலெக்சாண்டர் மஸ்க் 10 வார குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்ததினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது,ஜேம்ஸ் ரிலே எனும் தந்தையொருவர் விடுத்த வேண்டுகோளிற்கமைய, ஏற்று எலான் மஸ்க், காரின் அதிகபட்ச வேகத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்துவதை எளிதாக்கும் வகையில், கணினிமயமாக்கப்பட்ட அம்சத்தை மாற்றி அமைத்துள்ளார்.
குறித்த உரையாடலுக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஜேம்ஸ் ரிலே, தனது மகன் விபத்தினால் சாகவில்லையெனவும், லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்ததால் ஏற்பட்ட தீயினாலயே உயிரிழந்ததாகக் கூறி டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த வழக்கு புளோரிடா ஃபெடரல் நீதிமன்றத்திற்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















