போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் பெப்ரவரி 15ம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜேர்மன் அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டனர், ஆனால் மனித உரிமை அமைப்புகளால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.




















