நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏப்ரல் மாத இறுதி வரையில் இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் நீரேந்து பகுதிகளில் நீரின் மட்டம் குறைவடைந்து செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டி.சீ.ஆர்.அபேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்