சுவீடனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் அல்லது வீடுகளில் பராமரிப்பைப் பெறுபவர்களுக்கும் நான்காவது கோவிட் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட இந்த பரிந்துரையின்படி ஏற்கனவே மூன்றாவது தடுப்பூசியைப் பெற்று நான்கு மாதங்களின் பின்னரே நான்காவது தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கண்டிநேவிய நாட்டின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் எண்டர்ஸ் டெக்னெல், தமது அறிக்கை ஒன்றில் நான்காவது தடுப்பூசி அளவு கடுமையான நோய்க்கு எதிராகப் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
பெரும்பாலான தொற்றுநோய்களுக்குச் சுவீடன் ஒப்பீட்டளவில் ஐரோப்பிய நாடுகளிடையே தனித்த செயற்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. பெரும்பாலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுவீடன் தனிப்பட்ட பொறுப்பை நம்பியிருந்தது.
ஏனைய வடதுருவ நாடுகளுடன் ஒப்பிடும்போது கோவிட் வைரஸ் இறப்புகள் அதிகமாக இருந்தபோதிலும் முடக்கல்களைச் செயல்படுத்திய ஐரோப்பாவின் பல இடங்களை விடச் சுவீடனில் இறப்புக்கள் குறைவாகவே இருந்தன.