சதொச ஊடாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலான தண்ணீர் போத்தல் திட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சதொசவில் குடிநீர் போத்தல் ஒன்றை கொள்வனவு செய்து பின்னர் வெற்று போத்தலை சதொச நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது 10 ரூபா கழிவொன்று வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனம் SLS தரச்சான்றிதழ் பெற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்றை ரூபா 35இற்கு வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் வெற்று போத்தலுக்காக 10 ரூபாயைப் பெற்றுக்கொள்ளும் முறைமையை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்கள் அடுத்த முறை தண்ணீர் போத்தலை வாங்கினால் மட்டுமே குறித்த 10 ரூபா கழிவாக கிடைக்கும்.
எனவே வெற்று போத்தலை வழங்கிய பின் கொள்வனவு செய்யப்படும் அடுத்த தண்ணீர் போத்தலின் விலையானது 25 ரூபாவாக காணப்படும்.
இந்த விடயத்தை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.