இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை அணி தற்பொழுது அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது.
இந்த நிலையில், வனிந்து ஹசரங்கவும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்றைய தினம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது 20 20 போட்டியில் வனிந்து பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை றோயல் சலன்ஜர்ஸ் பங்களுரு அணி 10.75 கோடி இந்தியா ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.