இந்திய பங்குசந்தையானது எதிர்பாராத அளவிற்கு 14-ம் தேதி சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மும்பை பங்குசந்தையான பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 17,000 நிலைக்கு கீழே விழுந்தது.
இதற்கு காரணமாக மும்பை பங்குசந்தையான ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரியல் எஸ்டேட், மெட்டல் மற்றும் வங்கித் துறைகள் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. ஸ்மால்கேப், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் குறியீடுகள் 4.15 சதவீதம் வரை சரிந்தன.
இரண்டு நாட்களில் முதலீட்டாளர்கள் ரூ.12.38 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2,55,42,725.42 கோடியாக உள்ளது.
சரிவின் அடுத்தகாரணமாக ரூபாய் மதிப்பபில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் வெளியேற்றம் ஆகியவையும் மிகப்பெரிய காரணங்களாக கருதப்படுகின்றன.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சத்தில், பங்குச்சந்தைகள் பெரிய சரிவை எதிர்கொண்டன. இதனால் எண்ணெய் விலைகளும் உயர்ந்தன.