வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் பிரபலமான நடிகை வனிதா, பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வரும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் வனிதாவின் மகன் சினிமாவில் கால் தடம் பதிக்க போகும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்த நிலையில், அதன் பின்பு இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் காதலில் இருந்து அவரையும் பிரிந்தார். பின்பு பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து அதுவும் பிரச்சினையில் முடிந்தது.
தற்போது வட இந்தியர் ஒருவரை நான்காவதாக திருமணம் செய்துவிட்டதாக தகவல் வெளியானநிலையில், அதையெல்லாம் இல்லை என்று பதில் அளிக்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.
இவரது முதல் கணவருக்கு, ஒரு மகள் பிறந்த நிலையில், இரண்டாவதாக ஆகாஷ் என்பவரை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.
பின்பு இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்தனர். இதில் இரண்டு பெண் குழந்தை தாய் வனிதாவிடமும், மகன் ஸ்ரீஹரி கணவர் ஆகாஷ் உடன் இருப்பதற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது ஸ்ரீஹரி தனது தாத்தாவான நடிகர் விஜயகுமார் வீட்டில் வளர்ந்து வருகின்றார். தற்போது இவர் சினிமாவில் களமிறங்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்ரீஹரி ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.