பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே கொஞ்சம் அதிரடியான நபர்கள் தான், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுபவர்கள். நிகழ்ச்சியை பற்றி அவ்வப்போது ரசிகர்கள் பேசிக்கொண்டு தான் வருகிறார்கள்.
அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜுலி தாமரையிடம், இரண்டாவது திருமணம் நடந்தும் தாலி கட்டாதது ஏன் என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு தாமரை, நாங்க கவரிங் நகை போட்டு தான் திருமணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட்டாகவில்லை அதனால் கழட்டி விட்டேன். வீட்டைவிட்டு வெளியே சென்றதும் தான் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.




















