நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர், இவர் இரு மொழிகளிலும் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரியளவில் வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமம். இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர், அதில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
ஆனால் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் அனைவரிடமும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் இது குறித்து ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் “தெலுங்கில் வெளியான பிரேமம் என்ற படத்திற்காக மட்டுமே நான் ட்ரோல் செய்யப்பட்டேன் என்று நினைக்கிறேன். ஒரிஜினல் ப்ரேமம் படம் அனைவராலும் விரும்பப்பட்டது, அதில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலம்.
நான் அந்த கதாபாத்திரத்திரத்தை செய்திருக்க கூடாது என ஒரு நொடி உணர்ந்தேன். ஆனால் நான் அதை என் வழியில், நான் விரும்பும் வழியில் செய்யப் போகிறேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை.
எனக்கும் ப்ரேமம் படம் பிடிக்கும் ஆனால் நான் அதேபோல் செய்ய நினைக்கவில்லை, நான் சாய் பல்லவி போல் இருக்க முடியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக படம் நன்றாக ஓடிவிட்டது” என தெரிவித்துள்ளார்.




















