பதுளை – எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பயணி, தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதான குறித்த நபர் நேற்று (19) இரவு குறித்த விடுதியில் இருந்த போது கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.