கோவிட் வைரஸ் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கோவிட் தொற்றைப் போன்று பரவி வரும் மற்றுமொரு வைரஸ் டெங்கு நோய் இருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து 14 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் / சிவத்தல் / வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.