இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா திடீரென மறைந்துவிடாது. இந்த வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.