இன்று காலை நிலவரப்படி 2.02,131 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 3, 917 குறைவாகும்.
கடந்த டிசம்பர் 30-ந் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 16,764 ஆக இருந்தது. இந்நிலையில் 52 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 16,051 ஆக சரிந்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் இன்றைய காலை நிலவரப்படி 1.93 சதவீதமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2.02,131 ஆக சரிந்துள்ளது.
175,46, 25,710 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.