பிரபல திரைப்பட பாடலாரியிர் லலிதானந்த் உடல்நிலை குறைவால் காலமான தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் “என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் லலிதானந்த்.
அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.
இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
47 வயதாகும் லலிதானந்த், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வயதிலேயே திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் ,ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லலிதானந்த் எழுதி பாடல்களை குறிப்பிட்டு பலர் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
லலிதானந்த்தின் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, இரங்கல் தெரிவித்துள்ளார்.