நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 24 வயதுடைய இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்றதடுப்பு பிரிவிற்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்.
கொழும்பு- கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்டெஸ் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 17 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
சந்தேக நபரைக் கொழும்பு நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டதோடு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை சந்தேகநபரை தடுப்பு காவலில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ் இரு சம்பவங்கள் தொடர்பிலும் குற்றதடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கல்கிஸ்ஸை – டெரன்ஸ் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் மாலம்பே – சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 18,000 பணத்தொகையும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய ஹொகன்தர தெற்கு பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவ் இரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.