உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனினும் அது, எப்போது சாதாரண உள்ளூர் தொற்றாக மாறும் என்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலில் பாதிக்கப்படுவோரின் மருத்துவமனை சேர்க்கை மற்றும் இறப்பு என்பன குறைந்து வருகின்றன.
இந்த தருணத்தில் கொரோனா தொற்று நோய் உள்ளூர் தொற்றாக மாறி வருகிறதா? என்பது தொடர்பாக இந்திய கொல்கத்தாவில் கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பங்கேற்று உரையாற்றிய, மேற்கு வங்காள சிறப்பு பேராசிரியர் நரேஸ் புரோகித், கொரோனா,சாதாரண தொற்றாக மாறுவதற்கான கால நிர்ணயத்தை குறிப்பி;டமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்கள் ஏற்கனவே கொரோனா தாக்கிய பின்னர், அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருப்பதாக கண்டறிந்த பின்னரே, இந்த நோய் உள்ளூர் தொற்றாக மாறுவதை காண முடியும்.
ஏனவே அதற்கு காலக்கெடு வழங்க முடியாது என்று நரேஸ் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.