இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு நிலவுகிறது, இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பரில் இந்தியா வந்திருந்த பசில் ராஜபக்சே மீண்டும் புதுடெல்லிக்கு பயணம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். இதேவேளை, அடுத்த மாதம் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.