நகச்சொத்தை முதலில் விரலின் நுனியில் தொடங்கி பின்னர் நகத்தை சுற்றி பரவும்.
நகச்சொத்தைக்கு சிகிச்சையளிக்கப் பல தீர்வுகள் உள்ளன.
இருப்பினும், நகச்சொத்தையைப் போக்க உதவும் சிறந்த வீட்டு வைத்திய முறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கற்பூரவள்ளி எண்ணெய்
கற்பூரவள்ளி எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த கற்பூரவள்ளி எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவ வேண்டும்.
நீங்கள் டீ ட்ரீ ஆயில் மற்றும் ஆர்கனோ எண்ணெய்யைக் கூட ஒன்றாகக் கலந்தும் தடவலாம்.
இருப்பினும், இந்த இரண்டு எண்ணெய்யும் சேர்ப்பதால் உங்களின் நகச்சொத்தையில் எரிச்சல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வினிகர்
கால் நகத்தொற்றை நீக்க வினிகரை நீங்கள் பயன்படுத்தலாம்.
வினிகர் ஒரு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வீட்டு வைத்தியம் ஆகும். பாதிக்கப்பட்ட காலின் பாதம் மற்றும் நகங்களை வினிகரில் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
வெதுவெதுப்பான நீரில் வினிகரைக் கலந்து இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
பூண்டு
பூண்டு ஒரு இயற்கையான ஆன்டி பயாடிக் பொருள் என்று அனைவர்க்கும் தெரியும்.
கடுமையான வாசனை கொண்ட பூண்டை நீங்கள் கால் நகத்தொற்றை போக்க பயன்படுத்தலாம்.
இதனுடைய வாசனையை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், பூண்டை சிறுசிறு துண்டுகளாக நசுக்கி பாதிக்கப்பட பகுதியில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை வைத்து கட்டி விடுங்கள்.
அப்படி இல்லை என்றால் சில பூண்டை நசுக்கி மிதமான சூடுள்ள நீரில் போட்டு அந்தத் தண்ணீரில் காலை ஊற வையுங்கள் போதும்.