கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றொரு ஒழியைப் இன்று பார்க்கப் போகிறோம்.
அது தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்.
இந்த பானத்தினை குடித்தால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களைக் குறைக்கலாம். மேலும் இந்த ஜூஸ் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியவை.
இப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஜூஸ் பற்றி பார்க்கலாம்.
மாதுளை ஜூஸ்
மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்டராலைக் குறைக்க உதவும்.
மேலும் மாதுளை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தமனிகளில் பிளேக் உருவாக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அதோடு இந்த ஜூஸை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
ஆகவே இனிமேல் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போது, ப்ளாக் சால்ட் சேர்த்த மாதுளை ஜூஸை ஒரு டம்ளர் குடியுங்கள்.
இதனால் கொலஸ்ட்ரால் உடலில் தேங்குவதைத் தடுக்கலாம்.