பன்னீர் உடலுக்கு பல விதமான நன்மைகளை அளித்தாலும், காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான எனர்ஜியையும், இரவு நேரத்தில் சாப்பிட்டல் நன்கு தூக்கமும் வருகிறதாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 100 கிராம்
மிளகாய் தூள் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – தேவைக்கு
நெய் – 4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்
முதலில் பன்னீரை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.
அடுத்து, நறுக்கிய பன்னீரை மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் நெய்விட்டு உருக்கியதும் ஒவ்வொரு பன்னீர் ஸ்லைஸாகப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்…
கடைசியாக அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும் சுவையான பன்னீர் டோஸ்ட் ரெடி.