சரும ஆரோக்கியத்தை இரட்டிப்பாகும் தக்காளியை வைத்து ரசம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
எலுமிச்சை பழச்சாறு- சில துளிகள்
தக்காளி- 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
பூண்டு- 3
மிளகாய் வற்றல்- 3
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்துமல்லி- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு
எண்ணெய்
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளியை நசுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் ஆகிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நசுக்கி தனியாக வைத்திருக்கும் தக்காளி, அரைத்த மசாலா, மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி கொதித்த பின்னர் வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளிப்புடன் எலுமிச்சை சாறு சில துளிகள் அதனை ரசத்தில் ஊற்றி இறக்கினால் சுவையான தக்காளி ரசம் தயார்




















