கிராமத்து பாணியில் பலாக்காயை தீயில் சுட்டு அதை பச்சையாக பொருட்களை சேர்த்து இடித்து சம்பல் செய்யும் முறையை பார்க்கலாம்.
நாம் என்னதான் தற்போது இருக்கும் பல துரித உணவுகளையும் மற்றைய நாட்டு உணவுகளை ருசித்தாலும் கிராமத்து பாணியில் செய்யும் உணவிற்கு எதுவும் ஈடாகாது.
அந்த வகையில் சைவம் அசைவம் என எல்லா உணவுகளும் கிராமத்து பாணியில் சுவையாக தான் இருக்கும். வீட்டில் பலாக்காய் இருந்தால் அதை எப்போதும் போல சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சுட்டு சம்பல் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் – 1
தேங்காய் துருவியது – அரை கப்
பச்ச மிளகாய் – 10
வெங்காயம் – சிறியது 10
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் ஒரு பலாக்காயை அதன் தோலுடன் நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். அந்த பலாக்காயின் வெளிப்புறம் கறுப்பாக மாறியவுடன் அதை தோல் நீக்கி நன்றாக சீவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பலாக்காயை உரலில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், பச்ச மிளகாய், தேங்காய், சேர்த்து நன்றாக இடிக்க வேண்டும்.
இடித்த இந்த கலவையில் எலுமிச்சையை பிழிந்து சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் உப்பு சரி பார்த்து விட்டு சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் சாப்பிடலாம்.




















