இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் இஷான் கிஷான் 89 ஓட்டங்களும், ஷ்ரேயாஷ் ஐயர் 57 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் தசுன் சானக்க ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில் இலங்கை அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் ஆடியது. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியில் சரித் அசலங்க 53 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டத்தை பெற்றிருந்தார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்தியா 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.