கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் மெடிகாகோ நிறுவனத்தினால் கொவிபென்ஸ் என்னும் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. 18 முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசியை ஏற்ற முடியும் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாவரமொன்றின் மூலம் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்பூசியானது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 71 வீத செயற்திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.