உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடுக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார். அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்
உக்ரைன் மீதான இராணுவ தாக்குதல் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தற்காலிகமான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டாலும் அந்நாட்டுடனான தகவல் தொடர்பு வழிகள் மூடப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.