அமைதிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் ரஸ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தை ரஸ்யா வீட்டோ செய்த பாதுகாப்பு சபைக்கூட்டத்திற்குப் பின்னர் பொதுச்செயலாளரின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக ரஸ்யா, வீட்டோ அதிகாரம் பெற்றுள்ளதால் அதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் உக்ரைன் படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஸ்ய துருப்புக்களை தங்கள் தளங்களுக்கு திரும்புமாறும் குட்டரேஸ் கோரியுள்ளார்
அதேநேரம் ரஸ்யாவுக்கு எதிரான வரைவுக்கு ஆதரவளிக்காத பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்
இதேவேளை “ரஸ்யாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் வரைவுத் தீர்மானம், உக்ரேனிய சதுரங்கப் பலகையில் மற்றொரு மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற நடவடிக்கை” என்று கூறியே ஐக்கிய நாடுகளுக்கான ரஸ்யாவின் தூதுவர், வரைவை வீட்டோ செய்துள்ளார்