உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த படையினருக்கு ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது.
இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினருக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளதுடன், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தவிட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.